தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு பெரம்பலூர் பள்ளி மாணவர் தேர்வு

கேந்திரி வித்யாலயா பள்ளிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணிக்காக விளையாடுவதற்காக, பெரம்பலூர் PM ஸ்ரீ கேந்திரி வித்யாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவன் சி ஆதிசேஷன் தேர்வு;

Update: 2025-07-29 17:42 GMT
கேந்திரி வித்யாலயா பள்ளிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணிக்காக விளையாடுவதற்காக, பெரம்பலூர் PM ஸ்ரீ கேந்திரி வித்யாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவன் சி ஆதிசேஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் வருகின்ற செப்டம்பர் மாதம் அகமதாபாத்தில் நடைபெறவுள்ள கேந்திரி வித்யாலயா பள்ளிகளுக்கு பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணிக்காக விளையாடுவார் என்று பெரம்பலூர் PM ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியின் தலைமை ஆசிரியர் மேகநாதன் தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கான கடிதத்தை ஆதிசேஷன் தலைமை ஆசிரியரிடம் பெற்றுக் கொண்டு ஆசி பெற்றார். இந்த நிகழ்வின் பொழுது Lords Cricket அகாடமியின் தலைமை பயிற்சியாளர் மனோகர் உடன் இருந்தார். ஆதிசேஷன் தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெறுவதற்கு தேர்வு அடைந்ததை குறித்து அவரது பெற்றோர்கள் மற்றும் சக மாணவர்கள், சக வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Similar News