செல்வ காமாட்சியம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம்
மன்னார்குடி செல்வ காமாட்சியம்மன் கோவிலில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் வளையல் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.;
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள செல்வ காமாட்சி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமைகளில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று ஆடிப்பூரத்தை ஒட்டி செல்வ காமாட்சி அம்மனுக்கு நூற்றுக்கணக்கான வளையல்களைக் கொண்டு சிரப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார் பின்னர் செல்வ காமாட்சி அம்மன் கோவிலை வலம் வந்துஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.