பள்ளப்பட்டி- பள்ளிக்கு நடந்து சென்ற சிறுவனை துரத்தி கடிக்க முற்ப்படும் வெறி நாய். சிசிடிவி காட்சியால் பரபரப்பு.
பள்ளப்பட்டி- பள்ளிக்கு நடந்து சென்ற சிறுவனை துரத்தி கடிக்க முற்ப்படும் வெறி நாய். சிசிடிவி காட்சியால் பரபரப்பு.;
பள்ளப்பட்டி- பள்ளிக்கு நடந்து சென்ற சிறுவனை துரத்தி கடிக்க முற்ப்படும் வெறி நாய். சிசிடிவி காட்சியால் பரபரப்பு. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பதிவாகும். இஸ்லாமியர்கள் இறைச்சியை விரும்பி சாப்பிடுவதால் இறைச்சி கடைகள் அதிகமாக உள்ளது. இறைச்சி கடைக்காரர்கள் கழிவுகளை ஆங்காங்கே கொட்டி விடுவதால் தெருநாய்கள் நுகர்வு அதிகமாக உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் குழந்தைகள், ஆடு, மாடுகள், பொதுமக்களை துரத்தி கடித்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம், அரசு அதிகாரிகளிடமும் பலமுறை புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட செல்லு மீரான் பகுதியைச் சேர்ந்த சிறுவன் நேற்று காலை பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வெறிநாய் ஒன்று சிறுவனை துரத்தி துரத்தி கடித்துள்ளது. அருகில் இருந்தவர்கள் நாயை துரத்தி விட்டு காயமடைந்த சிறுவனை பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும்,மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது நாய் சிறுவனை கடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .