தடா கோவில்-டூவீலர் மீது லாரி மோதி விபத்து ஒருவர் உயிரிழப்பு.
தடா கோவில்-டூவீலர் மீது லாரி மோதி விபத்து ஒருவர் உயிரிழப்பு.;
தடா கோவில்-டூவீலர் மீது லாரி மோதி விபத்து ஒருவர் உயிரிழப்பு. மதுரை திருமங்கலம் உச்சப்பட்டி பகுதியில் செயல்படும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது 50 .இவர் பெயிண்டிங் கான்ட்ராக்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஜூலை 29ஆம் தேதி காலை 10:45 மணி அளவில் கரூர் - திண்டுக்கல் சாலையில் அவரது டூவீலரில் சென்றார். இவரது வாகனம் தடா கோவில் அரவக்குறிச்சி பிரிவு சாலை அருகே சென்ற போது, நாமக்கல் மாவட்டம் , பரமத்தி வேலூர் , மேற்கு தெருவை சேர்ந்த நவீன் குமார் வயது 30 என்பவர் வேகமாக ஓட்டி வந்த லாரி ராஜேந்திரன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டூவீலருடன் கீழே விழுந்த ராஜேந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த ராஜேந்திரனின் மனைவி மரியா லோஜினி வயது 48 80 அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் உயிரிழந்த ராஜேந்திரனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து , இது தொடர்பாக லாரியை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நவீன் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.