வாங்கல்- மனநலம் பாதித்த மூதாட்டி மாயம்.தாயாரை காணவில்லை மகன் புகார்.
வாங்கல்- மனநலம் பாதித்த மூதாட்டி மாயம்.தாயாரை காணவில்லை மகன் புகார்.;
வாங்கல்- மனநலம் பாதித்த மூதாட்டி மாயம்.தாயாரை காணவில்லை மகன் புகார். கரூர் மாவட்டம் மன்மங்கலம் தாலுகா வாங்கல் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் கதிர்வேல் மனைவி வெங்கட் அம்மாள் வயது 80. கடந்த ஐந்து வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.ஆயினும் அவருக்கு குணமாகவில்லை. இந்நிலையில் ஜூலை 25ஆம் தேதி இரவு 11:30 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. வழக்கமாக அவர் செல்லும் இடங்களில் தேடி பார்த்தும் , உறவினர்கள் வீட்டில் விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்கபெறாததால் வெங்கட் அம்மாள் மகன் ராஜேந்திரன் வாங்கல் காவல் நிலையத்தில் தனது தாயாரை காணவில்லை என புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு மாயமான வெங்கட்டம்மாளை தேடி வருகின்றனர் காவல்துறையினர்