ஸ்ரீ கெங்கையம்மன் கோயிலில் ஆடிப்பூர திருவிழா!
செஞ்சி கிராமத்தில் உள்ள ஸ்ரீ கெங்கையம்மன் கோயிலில் இன்று (ஜூலை30) ஆடிப்பூர திருவிழா நடைபெற்றது;
வேலூர், வடுகன்தாங்கல் அடுத்த செஞ்சி கிராமத்தில் உள்ள ஸ்ரீ கெங்கையம்மன் கோயிலில் இன்று (ஜூலை30) ஆடிப்பூர திருவிழா நடைபெற்றது. காலை கோ பூஜை, யாகம், அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. குழந்தை பாக்கியம் வேண்டி பல தம்பதிகள் இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.