விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

பாசிச பாஜக அரசு நடிகரை வைத்து கட்சி தொடங்கி தமிழகத்தை கைப்பற்ற நினைக்கிறது கல்லூரி, பள்ளி மாணவர்கள் அவர்கள் பின்னால் செல்லாமல் தடுக்க வேண்டும்.;

Update: 2025-07-30 17:29 GMT
பாசிச பாஜக அரசு நடிகரை வைத்து கட்சி தொடங்கி தமிழகத்தை கைப்பற்ற நினைக்கிறது கல்லூரி, பள்ளி மாணவர்கள் அவர்கள் பின்னால் செல்லாமல் தடுக்க வேண்டும், பெரம்பலூரில் விசிக சார்பில் நடந்த தீர்மான விளக்கப் பொதுக் கூட்டத்தில் போக்குவரத்து, மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேச்சு.. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில், வக்ஃபு திருத்தச்சட்டத்தை எதிர்த்து ஜீன் 14 திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற மதச்சார்பின்மை காப்போம் மாபெரும் மக்கள் திரள் பேரணி தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் இரத்தினவேல், மற்றும் கலையரசன் தலைமையில் இன்று மாலை நடைபெற்றது, இதில் தமிழக போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் மற்றும், காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், விசிக மாநில, மாவட்ட நிர்வாகிகள், பலர் கலந்து கொண்டார். இதில் இந்தியாவை மதச்சார்பற்ற நாடாகப் பாதுகாப்போம், வக்ஃபு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பேரேடு , ஆகியன தயாரிப்பதைக் கைவிட வேண்டும், மதவாத வன்முறைத் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சாசி சிவசங்கர் பேசும் போது, பாசிச பாஜக ஆட்சி தமிழகத்தை கைப்பற்றுவதற்காக பல்வேறு கபலிகர நாடகமாடி வருகிறது, அதிமுகவை விழுங்கிய நிலையில், கட்சியின் தலைவர் எடப்பாடி பாஜகவை பற்றி மாற்றி மாற்றிப் பேசிவரும் அவரும் கட்சியினரும் குழம்பி போய் இருக்கிறார்கள், மேலும் பாஜக புது நபர்கள் மூலம் கட்சியை தொடங்கி அதன் மூலம் தமிழகத்தை கைப்பற்ற நினைக்கிறது, தற்போது நடிகரை களம் இறக்கி கட்சியை தொடங்கி ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் பின்னால், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் போகாமல் தடுக்க வேண்டியது, இந்த கூட்டத்திற்கு வந்திருக்கிற ஒவ்வொருத்தருடைய கடமையாகும், அதற்காகத்தான் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது நாடாளுமன்றத்தில் நமது குரலாக திமுக தலைவர் தொல் திருமாவளவன் ஒலித்துக் கொண்டிருக்கிறார் என தெரிவித்தவர் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் எடுத்துக்காட்டாகவும், சித்தாந்த ரீதியாக பாஜகவை எதிர்த்து நிற்பது தமிழ்நாடு அதனுடைய முதலமைச்சர் திராவிட மாடல் முதல்வர் தளபதி ஸ்டாலின் என தெரிவித்தவர், முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கூறியது போன்று திமுகவும் விசிக்காகவும் கொள்கை கூட்டணியாக உள்ளது, ஆகவே கொள்கையை வென்றெடுக்க வேண்டும் தமிழகத்தை காக்க வேண்டும் அதற்கான பணியை இந்த தீர்மானக் கூட்டத்தின் வாயிலாக நாம் முன்னெடுப்போம் என தெரிவித்தார். இந்த கூட்டத்தில் விசிக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், பலர் கலந்து கொண்டனர்.

Similar News