மன்னார்குடியில் இந்து முன்னணி சார்பில் ஆலோசனை கூட்டம்
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்த ஆலோசனை கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது.;
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்த ஆலோசனை கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. மன்னார்குடியில் இந்து முன்னணி சார்பில் நேற்று விநாயகர் ஊர்வலம் குறித்த இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் மிகச் சிறப்பாக நடராஜ பிள்ளை தெரு ஸ்ரீ சக்திவேல் முருகன் ஆலயத்தில் நடைபெற்றது இதில் இந்த வருடம் ஊர்வலத்தை சிறப்பாக நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது விழா கமிட்டி அமைத்து இனிவரும் காலங்களில் அனைத்து பகுதிகளில் இருந்து அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்றும் இந்து முன்னணியின் ஆண்டு திட்டத்தின் படி நடத்தக்கூடிய அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.