என் எஸ் கே நகர்- மனநலம் சரியில்லாத வாலிபர் மாயம்.தாயார் புகார்.

என் எஸ் கே நகர் மனநலம் சரியில்லாத வாலிபர் மாயம்.தாயார் புகார்.;

Update: 2025-07-31 10:19 GMT
என் எஸ் கே நகர் மனநலம் சரியில்லாத வாலிபர் மாயம்.தாயார் புகார். கரூர் மாவட்டம் வெங்கமேடு குளத்து பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மருதமுத்து மகன் வேலு என்கிற வேல்முருகன் வயது 42.இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த மூன்று வருடங்களாக மணல் எல்லாம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.ஆயினும் குணமாகவில்லை. இந்நிலையில் ஜூலை 24ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணி அளவில் வெங்கமேடு என் எஸ் கே நகர் மாரியம்மன் கோவில் அருகே சென்றவர் திடீரென மாயமானார். வேல்முருகன் வழக்கமாக செல்லும் இடங்களில் தேடி பார்த்தும் உறவினர்கள் வீட்டில் விசாரித்து பார்த்தும் எவ்வித தகவலும் கிடைக்கப்பெறாததால் அவரது தாயார் பாப்பாத்தி வயது 70- என்பவர் வெங்கமேடு காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என புகார் அளித்தார், புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் மாயமான வேல்முருகனை தேடி வருகின்றனர்.

Similar News