தெற்கு காந்திகிராமம் - டூவீலர்-கார் நேருக்கு நேர் மோதி விபத்து.
தெற்கு காந்திகிராமம் - டூவீலர்-கார் நேருக்கு நேர் மோதி விபத்து.;
தெற்கு காந்திகிராமம் - டூவீலர்-கார் நேருக்கு நேர் மோதி விபத்து. கரூர் மாவட்டம் , ஆத்தூர்,ஆண்டாங் கோவில் , சரவணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராகவன் வயது 27. இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் கரூர் - திருச்சி சாலையில் அவரது டூவீலரில் சென்றார். இவரது வாகனம் தெற்கு காந்திகிராமம் ரயில்வே பாலம் அருகே சென்றபோது., எதிர் திசையில் திருச்சி மாவட்டம் , தொட்டியம் , சீனிவாசநல்லூர் , ரோஜா நகரை சேர்ந்த ரவீந்திரன் வயது 38 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் , ராகவன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது . இதில் பலத்த காயமடைந்த ராகவனை மீட்டு கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.சம்பவம் அறிந்த ராகவானின் மாமா ரமேஷ் வயது 50 என்பவர் அளித்த புகாரில் , சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட தாந்தோனிமலை காவல்துறையினர் காரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ரவீந்திரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.