தென்னிந்திய கால்பந்தாட்டத்தில் கூத்தாநல்லூர் அஸ்லாம்ஸ் ஸ்போட்ஸ் கிளப் அணி முதலிடம்

கூத்தாநல்லூரில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கால்பந்தாட்ட போட்டியில் கூத்தாநல்லூர் அஸ்லாம்ஸ் ஸ்போட்ஸ் கிளப் அணி முதலிடம்;

Update: 2025-08-01 05:53 GMT
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கூத்தாநல்லூரில் தென்னிந்திய அளவிலான எழுவர் கால்பந்தாட்ட போட்டிகள் கடந்த மாதம் 2ஆம் தேதி தொடங்கி ஒரு மாதம் நடைபெற்றது. இதில் மேற்கு வங்கம், பெங்களூர், கேரளா, கூத்தாநல்லூர் உள்ளிட்ட 26 கால்பந்தாட்ட அணிகள் பங்கேற்று விளையாடின. இன்று இரவு நடைபெற்ற இறுதி போட்டியில் கூத்தாநல்லூர் கொய்யா செவன்ஸ் அணியும் கூத்தாநல்லூர் அஸ்லாம்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகளும் மோதின. இதில் கூத்தாநல்லூர் அஸ்லாம் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி இரண்டு கோள்கள் அடித்து வெற்றி பெற்று ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் காண காசோலை மற்றும் கோப்பையை தட்டிச் சென்றது. இரண்டாம் இடத்தை கூத்தாநல்லூர் கொய்யா செவன்ஸ் அணியும் மூன்றாம் இடத்தை கேரளா மலபார் பஸ் அணியும் பிடித்தது.வெற்றி பெற்ற அணிகளுக்கு தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியை கூத்தாநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

Similar News