நிக்கல்சன் கால்வாயில் தூர்வாரும் பணி- ஆட்சியர் ஆய்வு!
தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
வேலூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நிக்கல்சன் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் இலட்சுமணன், வேலூர் வட்டாட்சியர் வடிவேல் உட்பட பலர் உடனிருந்தனர்.