உலகத் தாய்ப்பால் வார விழா மற்றும் இலவச வளைகாப்பு விழா ஏராளமானவர்கள் பங்கேற்பு.
தாய்ப்பால் விழிப்புணர்வு மற்றும் சமுதாய வளைகாப்பு விழா மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தொடங்கி வைத்தார்.;
நாமக்கல் தங்கம் மருத்துவமனை நாமக்கல் இந்திய மருத்துவ சங்கம் பெண்கள் மருத்துவ பிரிவு ரோட்டரி சங்கம் இன்னர் வீல் சங்கம் நாமக்கல் மகப்பேறு மருத்துவ சங்கம் இவை இணைந்து உலக தாய்ப்பால் வார விழா,தாய்ப்பால் விழிப்புணர்வு மற்றும் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவில் சமூக நலத்துறை சார்பில் பாலூட்டும் தாய்மார்களுக்கான உணவு வகைகள் தாய்ப்பால் அதிகரிக்கும் உணவு குறித்த ஒரு நாள் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற்றது இதில் தாய்ப்பால் அதிகரிக்கும் உணவு வகைகள் கடலைப்பருப்பு, பாதாம், பிஸ்தா, பேரிச்சம்பழம் உள்ளிட்ட பொருட்கள் தவிர உளுந்தங்கஞ்சி முளைக்கட்டிய பச்சை பயிறு, முட்டை, ஆரஞ்சு, மாதுளை ஆகியவை காட்சி படுத்தப்பட்டிருந்தது இதனை மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தொடங்கி வைத்தார் மருத்துவமனை நிர்வாகி மல்லிகா மற்றும் குழந்தைவேலு முன்னிலை வகித்தனர் இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் முன்னதாக கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினார் மேலும் பாலூட்டு தாய்மார்களுக்கு ஆட்சியர் அறிவுரை கூறினார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை சேர்ந்த மருத்துவர்கள் ஊழியர்கள் என பலர் பங்கேற்றனர். இந்த வருடத்தில் தாய்ப்பால் ஊட்டுவதற்கு முன்னுரிமை அளியுங்கள் நிலையான ஆதரவு அமைப்புகளை உருவாக்குங்கள் என முழக்கங்களும் இந்நிகழ்ச்சியில் நடைபெற்றது.