மருத்துவர் நகர்- டூவீலர் மீது கார் மோதி விபத்து- சிறுவர்கள் இருவர் படுகாயம்.
மருத்துவர் நகர்- டூவீலர் மீது கார் மோதி விபத்து- சிறுவர்கள் இருவர் படுகாயம்.;
மருத்துவர் நகர்- டூவீலர் மீது கார் மோதி விபத்து- சிறுவர்கள் இருவர் படுகாயம். கரூரை அடுத்த செவந்திபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ஹரிஷ் குமார் வயது 17. கரூர் மருத்துவ நகர் பகுதியைச் சேர்ந்த புகழ் மகன் தர்ஷன் வயது 16. இவர்கள் இருவரும் ஜூலை 31ஆம் தேதி காலை 8:15 மணியளவில் கரூர் - ஈரோடு சாலையில் டூவீலரில் சென்றனர். ஹரிஷ் குமார் டூ வீலரை ஓட்டிச் சென்றார். இவர்களது வாகனம் கரூர் மருத்துவர் நகர் பிரிவு அருகே வந்தபோது , அதே சாலையில் பின்னால் வந்த கரூர் மூலிமங்கலம் நாட்டுக்கல் தெருவை சேர்ந்த பிரசாந்த் வயது 29 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் , ஹரிஷ் குமார் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டூவீலர் உடன் கீழே விழுந்ததில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் மீட்டு ஹரிஷ் குமாரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் , தர்ஷனை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த ஹரிஷ் குமாரின் தந்தை புகழ் அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட கரூர் மாநகர காவல் துறையினர் , காரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பிரசாந்த் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.