முள்ளிப்பாடி - உடல்நலம் குன்றி வாந்தி எடுத்த இளம் பெண் உயிரிழப்பு.

முள்ளிப்பாடி - உடல்நலம் குன்றி வாந்தி எடுத்த இளம் பெண் உயிரிழப்பு.;

Update: 2025-08-01 10:48 GMT
முள்ளிப்பாடி - உடல்நலம் குன்றி வாந்தி எடுத்த இளம் பெண் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் , கடவூர் தாலுகா , சேர்வைக்காரன் பட்டி அருகே உள்ள முள்ளிப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி மனைவி சகுந்தலா வயது 40. இவருக்கு நேற்று ஜூலை 31ஆம் தேதி காலை 8:30 மணி அளவில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சகுந்தலாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்த பட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சகுந்தலாவின் கணவர் பாலாஜி அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட பாலவிடுதி காவல்துறையினர் உயிரிழந்த சகுந்தலாவின் உடலை அதே மருத்துவமனை சவகிடங்குக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.

Similar News