உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பார்வையிட்டு, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம் பி எம்.பி கே.ஆர்.என் ராஜேஷ்குமார்.

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் , நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டத்தில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமினை பார்வையிட்டு, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.;

Update: 2025-08-01 12:48 GMT
நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், ஆரியூர் சத்தியவதி முத்துசாமி திருமண மண்டபத்தில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் , மாவட்ட ஆட்சியர் தலைமையில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் முன்னிலையில் ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் கலந்து கொண்டு, துறை சார்ந்த அரங்கில் மனுக்கள் பதிவு செய்வதை பார்வையிட்டு, மனுக்கள் அளித்த பயனாளிகளுக்கு உடனடி தீர்வாக அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற மாபெரும் திட்டத்தினை கடந்த 15.07.2025 அன்று கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில், “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டம் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 238 சிறப்பு முகாம்கள் 30.09.2025 வரை நடத்தப்படுகிறது. இந்த முகாம்களில் நகர்ப்புறபகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அதனடிப்படையில் இன்றைய தினம் இராசிபுரம் நகராட்சியில் ஆலாம்பாளையம் பேரூராட்சியில் குமரன் மஹால், பரமத்தி பேரூராட்சியில் மாதேஸ்வர சமுதாயக்கூடம், மோகனூர் வட்டாரத்தில் ஆரியூர் சத்தியவதி முத்துசாமி திருமண மண்டபம், புதுசத்திரம் வட்டாரத்தில் தாத்தையங்கார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, திருச்செங்கோடு வட்டாரத்தில் மான்கரட்டுப்பாளையம் கிராம பஞ்சாயத்து சேவை மைய கட்டிடம் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் மோகனூர் வட்டாரத்தில் ஆரியூர் சத்தியவதி முத்துசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, மனுக்கள் அளித்த 46 பயனாளிகளுக்கு உடனடி தீர்வாக சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், மருத்துவக் காப்பீட்டு அட்டை உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இம்முகாமில், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரபாகரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News