புலியூர்- திமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
புலியூர்- திமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
புலியூர்- திமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டம் , கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புலியூர் பேரூர் கழக அலுவலகத்தில் வாக்குச்சாவடி BLA 2 , BLC நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினரும் , தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன் , புலியூர் பேரூர் கழக செயலாளர் அம்மையப்பன், மாவட்ட மாணவரணி செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் ,சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளரும், மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளருமான அம்பாள் நந்தகோபால் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது கடந்த சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி வெற்றி பெற்றதை விட வரும் சட்டமன்ற தேர்தலில் கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றிக்கனியை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கைகளில் சமர்ப்பிக்க வேண்டும் என கட்சியினருக்கு ஊக்கமூட்டினார். தொடர்ந்து கட்சியினர் தேர்தல் தொடர்பாக மேற்கொண்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார்.