திமுக அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி உறுப்பினர் சேர்க்கை தீவிர படுத்த வேண்டும்.எம் எல் ஏ சிவகாமசுந்தரி விளக்கம்.
திமுக அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி உறுப்பினர் சேர்க்கை தீவிர படுத்த வேண்டும்.எம் எல் ஏ சிவகாமசுந்தரி விளக்கம்.;
திமுக அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி உறுப்பினர் சேர்க்கை தீவிர படுத்த வேண்டும்.எம் எல் ஏ சிவகாமசுந்தரி விளக்கம். கரூர் மாவட்டம் , கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உப்பிடமங்கலம் பேரூர் கழக வாக்குச்சாவடி BLA 2 , BLC நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உப்பிடமங்கலம் தனியார் கூட்டரங்கில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினரும் , தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன் ,உப்பிடமங்கலம் பேரூர் கழக செயலாளர் தங்கராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் ,சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளரும், மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளருமான அம்பாள் நந்தகோபால் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தமிழகத்தில் நடைபெறும் திமுக அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி உறுப்பினர் சேர்க்கையை தீவிர படுத்த வேண்டும் என கட்சியினரிடம் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து கட்சியினர் மேற்கொண்டு வரும் உறுப்பினர் சேர்க்கை மற்றும் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.