கரூர்- தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்- திரைப்படம் காண சென்றவர் உயிரிழப்பு.

கரூர்- தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்- திரைப்படம் காண சென்றவர் உயிரிழப்பு.;

Update: 2025-08-02 08:22 GMT
கரூர்- தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்- திரைப்படம் காண சென்றவர் உயிரிழப்பு. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் வயது 52. அண்மைக்காலமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இவருக்கு தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக விரக்தி மனநிலையில் வாழ்ந்து வந்தார். மனநிலையில் மாற்றம் வேண்டி ஆகஸ்ட் 1ம் தேதி இரவு கரூரில் உள்ள கலையரங்கம் தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்றுள்ளார். படம் பார்த்து அனைவரும் சென்ற நிலையில் மயக்கமுற்ற நிலையில் அவரது இருக்கையிலேயே இருந்துள்ளார். தியேட்டர் பணியாளர்கள் படம் முடிந்த பிறகு தியேட்டரை பரிசோதனை செய்தபோது ரமேஷ் மயக்க நிலையில் இருந்தது அறிந்து உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த ரமேஷின் மனைவி தனலட்சுமி வயது 50 என்பவர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உயிரிழந்த ரமேஷ் உடலை அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Similar News