பால்வார்பட்டி - பொது கிணற்றில் மது போதையில் நீரில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு.
பால்வார்பட்டி - பொது கிணற்றில் மது போதையில் நீரில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு.;
பால்வார்பட்டி - பொது கிணற்றில் மது போதையில் நீரில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் , புகலூர் தாலுக்கா , தென்னிலை அருகே உள்ள பால்வார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் வயது 48. இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று குடும்பத்தகராறில் தனியாக வசித்து வாந்தார். இதனால் மது போதைக்கு அடிமையானர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்றார். ஆனால் நேற்று ஆகஸ்ட் 1ம் தேதி காலை 7 மணி அளவில் பால்வார்பட்டி காளியம்மன் கோவில் அருகே உள்ள பொது கிணற்றில் நீரில் மூழ்கி இறந்த நிலையில் இருந்துள்ளார். இதனைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பெயரில் ஆனந்தனின் சகோதரி ஆனந்த குமாரி வயது 40 என்பவர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்து , இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கி உயிரிழந்த ஆனந்தனை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தென்னிலை காவல் துறையினர்.