ஸ்ரீ மங்கள நாராயணிக்கு சிறப்பு பூஜை!

பொற்கோவிலில் ஸ்ரீ நாராயணி பீடத்தில் ஸ்ரீ மங்கள நாராயணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.;

Update: 2025-08-02 15:26 GMT
வேலூர் மாவட்டத்தில் பொற்கோவிலில் ஸ்ரீ நாராயணி பீடத்தில் உலக நன்மைக்காகவும், இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியும் மங்கள நாராயணி பூஜைகள் இன்று நடந்தது. இப்பூஜைகளில் ஸ்ரீ சக்தி அம்மா அபிஷேகங்கள் செய்தார். இதில் ஸ்ரீமங்கள நாராயணி அம்மனுக்கு பழச்சாறு, பன்னீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. மேலும் ஆரத்தி காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

Similar News