காட்பாடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்!
புதிய மின்னணு குடும்ப அட்டையில் உறுப்பினர் பெயர் சேர்த்தல் கோரி மனு அளித்த பயனாளிக்கு பெயர் சேர்த்தல் செய்த ஆணையினை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.;
வேலூர் மாவட்டம் காட்பாடி பிரம்மபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இன்று (ஆகஸ்ட் 2) நடந்த "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் புதிய மின்னணு குடும்ப அட்டையில் உறுப்பினர் பெயர் சேர்த்தல் கோரி மனு அளித்த பயனாளிக்கு பெயர் சேர்த்தல் செய்த ஆணையினை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். அப்போது வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, ஒன்றியக்குழுத்தலைவர் வேல்முருகன் உட்பட பலர் உடனிருந்தனர்.