கரூர்-மாவீரன் தீரன் சின்னமலைக்கு வீரவணக்கம்செலுத்திய தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அமைப்பினர்.
கரூர்-மாவீரன் தீரன் சின்னமலைக்கு வீரவணக்கம்செலுத்திய தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அமைப்பினர்.;
கரூர்-மாவீரன் தீரன் சின்னமலைக்கு வீரவணக்கம்செலுத்திய தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அமைப்பினர். இந்திய சுதந்திரத்திற்காக ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய தீரன் சின்னமலை 220 வது நினைவு தினம் இன்று. தமிழகம் முழுவதும் இன்று மறைந்த வீரருக்கு புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரூர் பேருந்து நிலைய ரவுண்டான அருகே தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் அருள் தலைமையில் தீரன் சின்னமலை திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து தீரன் சின்னமலையின் புகழை பரப்பும் வகையில் அவரது தீரங்களை வாழ்த்தி கோஷமிட்டனர். இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மறைந்த தங்களது தலைவருக்கு புகழஞ்சலி செலுத்தினார்.