கரூர்-காவிரியில் குளிக்க வழிபாடு நடத்த காவல்துறை தடை. பொதுமக்கள்
கரூர்-காவிரியில் குளிக்க வழிபாடு நடத்த காவல்துறை தடை. பொதுமக்கள்;
கரூர்-காவிரியில் குளிக்க வழிபாடு நடத்த காவல்துறை தடை. பொதுமக்கள் அதிர்ச்சி. ஆண்டுக்கு ஒரு முறை ஆடி18 என்று அழைக்கப்படும் ஆடிப்பெருக்கு முன்னிட்டு காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் புனித நீராடி கன்னிமார்கள் சுவாமி கும்பிடுவது வழக்கம். அதேபோல் புதிதாக திருமணமானவர்கள் தங்கள் மண மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு வணங்குவதும் வழக்கம். காவிரி ஆற்றில் இன்று 17,000 கன அடிக்கும் மேல் காவிரி ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் சென்று கொண்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, வழிபாடு நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நெரூர், வாங்கல், புகழூர், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட காவிரி கரையோரங்களில் பொதுமக்கள் இறங்கும் இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.