மத்திய அரசை கண்டித்து கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்!

வேலூரில் மத்திய அரசை கண்டித்து கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2025-08-03 15:48 GMT
சட்டீஸ்கர் மாநிலத்தில் 2 கத்தோலிக்க கன்னியாஸ்திரிகளை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 3) வேலூர் விண்ணரசி மாதா பேராலயத்தில் கத்தோலிக்க இளைஞர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அருட்தந்தை ராயலாசர் மற்றும் கன்னியாஸ்திரிகள், இளைஞர்கள் பலர் கலந்து கொண்டு பாஜக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Similar News