தூத்துக்குடியில் புதிய வழிதடத்தில் மினி பஸ் சேவை துவக்கம்
தூத்துக்குடியில் புதிய வழிதடத்தில் மினி பஸ் சேவை : அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.;
தூத்துக்குடியில் புதிய வழிதடத்தில் மினி பஸ் சேவையை அமைச்சர் கீதா ஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தூத்துக்குடியில் பாலிடெக்னிக் முதல் பழைய பேருந்து நிலையம், புதிய பழைய பேருந்து நிலையம், தாளமுத்து நகர் வரையில் புதிய வழிதடத்தில் மினி பஸ் சேவையை சமூக நலன் - மகளீர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநகரத் துணைச் செயலாளர், மினி பஸ் உரிமையாளர் கீதா முருகேசன், துணை மேயர் ஜெனிடா, மாவட்ட அவை தலைவர் செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி பாலசுப்பிரமணியன், போல்பேட்டை வட்ட பிரதிநிதி சேது, முன்னாள் சங்கரப்பேரி பஞ்சாயத்து தலைவர் கருத்தப்பாண்டி, மினி பஸ் உரிமையாளர் சங்க தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் இளங்கோ அனைவரும் திமுக வழக்கறிஞர்களின் தலைவர் வக்கீல் நாகராஜன் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.