சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால், இளைஞர் வாகனத்தில் இருந்து கீழே விழுந்து பலி;
திருச்சி பொன்மலையைச் சோ்ந்தவா் வினோத் (25). இவா் சனிக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் மாநகராட்சி பிரதான அலுவலகம் அருகே உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால், வினோத் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த வினோத்தை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, சிகிச்சை பனின்றி சனிக்கிழமை இரவு வினோத் உயிரிழந்தாா். இதுகுறித்து திருச்சி மாநகர தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.