தடாகோவில்- டூவீலர் மீது கார் மோதி ஒருவர் உயிரிழப்பு.
தடாகோவில்- டூவீலர் மீது கார் மோதி ஒருவர் உயிரிழப்பு.;
தடாகோவில்- டூவீலர் மீது கார் மோதி ஒருவர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா , குரும்பபட்டி பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து வயது 63. இவர் ஆகஸ்ட் 3ஆம் தேதி காலை 9 :15 மணியளவில் கரூர் - திண்டுக்கல் சாலையில் அவரது டூவீலரில் சென்றார். இவரது வாகனம் தடா கோவில் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது அதே சாலையில் வேகமாக வந்த கார் காளிமுத்து ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த காளிமுத்துவை மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த காளிமுத்துவின் மகன் பிரேம்குமார் வயது 37 என்பவர் அறிவித்த புகாரில் சம்பவ இடத்துக்கு செல்லும் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் காரை வேகமாகவும் அஜாக்கிரதையாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.