ஜங்கல்பட்டி-குடும்பத் தகராறில் பிரிந்து சென்ற மனைவி விரக்தியில் கணவன் கிணற்றில் குதித்து தற்கொலை.

ஜங்கல்பட்டி-குடும்பத் தகராறில் பிரிந்து சென்ற மனைவி விரக்தியில் கணவன் கிணற்றில் குதித்து தற்கொலை.;

Update: 2025-08-04 10:19 GMT
ஜங்கல்பட்டி-குடும்பத் தகராறில் பிரிந்து சென்ற மனைவி விரக்தியில் கணவன் கிணற்றில் குதித்து தற்கொலை. கரூர் மாவட்டம் , அரவக்குறிச்சி தாலுகா , ஆலமரத்துப்பட்டி அருகே உள்ள ஜங்கால் பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் வயது 33.சலூன் கடை நடத்தி வந்தார்.இவரது மனைவி செல்வி. இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறு கடந்த இரண்டு வருடமாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். இதனால் விரக்தியடைந்த மணிகண்டன் ஆகஸ்ட் 2ஆம் தேதி மதியம் 12 மணியளவில் ஜங்கால்பட்டி பகுதியில் உள்ள பொது கிணற்றில் மது போதையில் குதித்து நீரில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த மணிகண்டனின் தந்தை சேகர் வயது 55 என்பவர் அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் உயிரிழந்த மணிகண்டனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Similar News