கரூர் எம்பி தேர்தலில் முறைகேடு-நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க மனு.
கரூர் எம்பி தேர்தலில் முறைகேடு-நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க மனு.;
கரூர் எம்பி தேர்தலில் முறைகேடு-நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க மனு. கரூர் மாவட்டம் , அரவக்குறிச்சி அதிமுக ஒன்றிய செயலாளர் கலையரசன். நடந்து முடிந்த கரூர் நாடாளுமன்ற தேர்தல் பொது வாக்குச்சாவடி 165ல் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் முறையாக வழங்கப்படவில்லை என்றும், நேரடியாக ஒப்புதல் பெறவில்லை என்றும், குறிப்பிட்ட கட்சியை சார்ந்தவர்களுக்கு மட்டும் பூத் சிலிப் அரசு அதிகாரிகள் வழங்கி உள்ளதாகவும், இது சம்பந்தமாக வாக்காளர்களின் ஒப்புகை கையெழுத்துக்களை போலி ஆவணங்கள் தயாரித்து அனுப்பியுள்ளதாக வாக்குச்சாவடி நிலை அலுவலர் பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியர் நான்கு வாரங்களுக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென மதுரை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இது சம்பந்தமாக இன்று தாங்களுக்கு வழங்கிய நகல்களை மனுவுடன் இணைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார் கலையரசன்.