கரூர் தலைமறைவு குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

கரூர் தலைமறைவு குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.;

Update: 2025-08-04 14:17 GMT
கரூர் தலைமறைவு குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். கரூர் மாவட்டம் , தென்னிலை காவல் நிலையகுற்ற எண் 108/11 ,04/24 வழக்கின் எதிரி ஈரோடு மாவட்டம் , அம்மாபேட்டை, கவுண்டர் வீடு போஸ்ட் ஆபீஸ் எதிரில் வசித்து வந்த மாரப்ப ராயக்கர் ராமராமி மகன் மா.முருகேசன் வயது 59 . இவரது மற்றொரு முகவரி ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் தாலுகா , குமாரபாளையம் அஞ்சல் , 8/39 பிள்ளையார் கோவில் வீதி,பெரியார் பாளையம் என்ற முகவரியை சேர்ந்த மேலே கண்ட படத்தில் உள்ள முருகேசன் என்பவரை 24-01-24 தேதியில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பிடியாணை பிறபிக்கப்பட்டிருந்தது. ஆயினும் முருகேசனை கண்டுபிடிக்க இயலவில்லை என கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் திரும்ப ஒப்படைக்கப்பட்டதால், அவர் தலைமறைவாகியுள்ளார் என்று கருதியதின் பேரில், முருகேசன் எதிர்வரும் 18- 08-25 அன்று காலை 10:30 மணிக்கு கரூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜராக வேண்டும் என்று இதன் மூலம் பிரகணப்படுத்தப்படுவதாக கரூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Similar News