கரூர்-சர்வீஸ் சாலையில் கன்டெய்னர் லாரி - பார்சல் லாரி மோதி விபத்து.
கரூர்-சர்வீஸ் சாலையில் கன்டெய்னர் லாரி - பார்சல் லாரி மோதி விபத்து.;
கரூர்-சர்வீஸ் சாலையில் கன்டெய்னர் லாரி - பார்சல் லாரி மோதி விபத்து. சற்று முன் கரூர் -சேலம் பைபாஸ் சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் கன்டைனர் லாரியும் , பார்சல் லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கன்டெய்னர் லாரி சாலையை விட்டு விலகி தடுப்பு சுவர் மீது ஏறி நின்றதால் உடனடியாக லாரியை எடுக்க இயலவில்லை. எப்போதும் போக்குவரத்து வாகனங்கள் அதிகம் உள்ள இந்த சாலையில் விபத்து ஏற்பட்டு உடனடியாக வாகனங்களை மீட்க முடியாததால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. தெய்வாதீனமாக இந்த விபத்தில் லேசான காயங்களுடன் இரு லாரி டிரைவர்களும் உயிர் தப்பினர். சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்து பிறகு வாகனங்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.