பாஜகவுடன் அதிமுக பயணிப்பதை அக் கட்சி தொண்டர்களே ஏற்கவில்லை என ஜவாஹிருல்லா பேட்டி
எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணம் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது;
திருவாரூர் அருகே பவித்ர மாணிக்கத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் வாக்காளர்கள் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்த காலம் போய் தற்போது ஆட்சியாளர்கள் வாக்காளர்களை தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணம் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை என்றும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதை அந்த கட்சியினரே விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.