குமரி மாவட்டம் குளச்சல் போலீஸ் சரக துணை காவல் கண்காணிப்பாளராக இருந்து வந்த பிரவீன் கௌதம் பதவி உயர்வு பெற்று திருப்பூர் வடக்கு மாவட்ட எஸ்பி ஆக சென்றார். இதையடுத்து குளச்சல் துணை காவல் கண்காணிப்பாளராக ரேகா ஆர் நங்லெட் என்பவர் நியமிக்கப்பட்டார். இரணியல், களியக்காவிளை காவல் நிலையங்களில் பயிற்சி ஏஎஸ்பியாக பணியாற்றியவர். நேற்று குளச்சல் புதிய ஏ எஸ் பி யாக பொறுப்பேற்றுக் கொண்டார். குளச்சல் சப் டிவிஷனில் முதன்முதலாக பொன் ஏ எஸ் பி யாக பதவியேற்றது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.