மன்னார்குடியில் பற்றி எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஸ்டார்ட் செய்த போது பற்றி எரிந்த ஸ்கூட்டரால் மன்னார்குடியில் பரபரப்பு;

Update: 2025-08-05 03:18 GMT
மன்னார்குடியை சேர்ந்த தங்கமணி என்பவர் சாந்தி தியேட்டர் எதிர்புறம் செல்போன் கடை நடத்தி வருகிறார்.இவர் கோமாக்கி நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனத்தை கடந்த 4 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் இன்று இரவு கடை வாசலில் நின்ற இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்த போது புகை வர தொடங்கியது.பின்னர் அதிக புகை வெளியேறி வாகனம் தீபிடித்து எரிந்தது. அருகில் இருந்தவர் தீயணைப்பு கருவி மூலம் தீயை அனைத்தார்.இந்த விபத்தில் மின்சார இருசக்கர வாகனம் தீயில் எரிந்து முற்றிலும் சேதமடைந்தது

Similar News