குமரி மாவட்டம் தக்கலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிருபாசனம் கிறிஸ்தவ சபையில் போதகராக இருந்து வந்த மூலச்சல் பகுதியை சார்ந்த ஜோசப் என்பவருடைய மகன் வர்கீஸ் (வயது 55), வேதாகம விடுமுறை வகுப்பிற்கு வந்த 17 வயது சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவன் தக்கலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தக்கலை போலீசார் POCSO வழக்கு பதிவு செய்தனர். மேற்படி வர்க்கீஸ் நேற்று 04-08-25 கைது செய்யப்பட்டுள்ளார்.