அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
மன்னார்குடியில் 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்;
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேரடி எதிரே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மண்டல துணைத்தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்ற ஆற்போட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்,இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும்,நடத்துனரிடம் கட்டாய டிஜிட்டல் பரிவர்த்தனையை கட்டாயப்படுத்த கூடாது என்பன உள்ளிட்ட 8அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.