மேலப்பாளையத்தில் டூவீலர்கள் மோதல்- கணவன் மனைவி குழந்தைகள் படுகாயம்.
மேலப்பாளையத்தில் டூவீலர்கள் மோதல்- கணவன் மனைவி குழந்தைகள் படுகாயம்.;
மேலப்பாளையத்தில் டூவீலர்கள் மோதல்- கணவன் மனைவி குழந்தைகள் படுகாயம். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் , பெரிய சோளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் வயது 38. இவரது மனைவி சித்ரா வயது 32 ,இவர்களது மகள் சுஜாதா 3 வயது, வித்யா வயது 1. ஆகியோர் ஆகஸ்ட் 3ம் தேதி மதியம் 2 மணி அளவில் , கரூர் மாவட்டம் புலியூரில் இருந்து பசுபதிபாளையம் செல்லும் சாலையில் டூவீலரில் சென்றனர். இவர்களது வாகனம் மேலப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மஹால் அருகே சென்றபோது , அதே சாலையில் பின்னால் வந்த கரூர் மாவட்டம் புலியூர் பி வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த மணி வயது 26 என்பவர் ஓட்டி வந்த மற்றொரு டூவீலர் , விஜயன் ஓட்டி சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் விஜயன் அவரது மனைவி குழந்தைகள் டூவீலருடன் கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அனைவரையும் மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக விஜயன் அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட பசுபதிபாளையம் காவல்துறையினர் டூவீலரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய மணி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.