அஷேசம் கிராமத்தில் அரசு பள்ளி அருகே குவிந்துள்ள குப்பை
மன்னார்குடி அருகே அசேஷம் கிராமத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காததால் பள்ளி அருகே தேங்கிய குப்பையால் மாணவர்களுக்கு நோய் தோற்றும் ஏற்படும் சூழல் நிலவுகிறது.;
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அசேஷம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூட வளாகத்தில் அங்கன்வாடி மையமும் செயல்படுகிறது. இப்பள்ளியில் 40கும் மேற்பட்ட மாணவர் மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அஷேசம் கிராமத்தின் பல்வேறு பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த பள்ளிக்கூடம் அருகே கொட்டப்படுகிறது.கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாக இந்த குப்பைகள் முறையாக அகற்றப்படாததால் மலை போல் குப்பைகள் சேர்ந்து வருகிறது.இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.தற்போது இப்பகுதியில் மழை பெய்வதால் குப்பைகள் மூலம் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு நோய்த்தொற்று பரவுமோ என பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவலையடைகின்றனர். மேலும் பள்ளிக்கூடம் அருகே பேருந்து நிறுத்தம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது நாள்தோறும் பொதுமக்கள் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் அஷேசம் கிராமத்தில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படாததால் பணியாளர்கள் சரியாக வேலைக்கு வருவதில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே துப்புரவு பணியாளர்களுக்கு உரிய சம்பளத்தை வழங்கி அரசுப் பள்ளிக்கூட வளாகம் அருகே மலை போல் குவிந்திருக்கும் குப்பையை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும் என்பது கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.