முருகர் ஆலயத்தில் சிறப்பு பூஜை!
ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ பால சுப்பிரமணியர் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இன்று (ஆகஸ்ட் 5) ஆடி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு முருகருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.