கல்லுபாளையம் - மனைவி மகனுடன் சென்றவர் டூ வீலர் பேருந்து வீதி மோதி விபத்து.
கல்லுபாளையம் - மனைவி மகனுடன் சென்றவர் டூ வீலர் பேருந்து வீதி மோதி விபத்து.;
கல்லுபாளையம் - மனைவி மகனுடன் சென்றவர் டூ வீலர் பேருந்து வீதி மோதி விபத்து. கரூர் அடுத்த சோமுர் அருகே உள்ள கல்லுபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பால சண்முகம் வயது 36. இவரது மனைவி பாக்கியலட்சுமி வயது 28. இவர்களது மகன் ஆதித்யா வயது 5. இவர்கள் மூன்று பேரும் ஜூலை 30ஆம் தேதி காலை 9:15 மணி அளவில் கரூர்-நெருர் சாலையில் டூவீலரில் சென்றனர். இவர்களது வாகனம் பஞ்சமாதேவி அருகே உள்ள கல்லுப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது, இவர்களுக்கு முன்னால் கரூரை அடுத்த சோமுர், கலைஞர்நகர் பகுதியை சேர்ந்த சென்னியப்பன் வயது 60 என்பவர் வேகமாக ஓட்டிச் சென்ற பேருந்து திடீரென எவ்வித சிக்னாலும் வெளிப்படுத்தாமல் பிரேக் இட்டதால் பின்னால் பால சண்முகம் ஓட்டி வந்த டூவீலர் பேருந்தின் பின்புறம் மோதி விபத்து ஏற்பட்டது இதில் டூவீலரில் பயணித்த மூன்று பேரும் கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாக்கியலட்சுமி அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர் , இது தொடர்பாக பேருந்தை சாலை விதிகளுக்கு புறம்பாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய சென்னியப்பன் மீது நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர் வெங்கமேடு காவல்துறையினர்.