மேட்டு திருக்காம்புலியூர் - திமுக சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
மேட்டு திருக்காம்புலியூர் - திமுக சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.;
மேட்டு திருக்காம்புலியூர் - திமுக சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. கிருஷ்ணராயபுரம் திமுக மேற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் மேட்டுதிருக்காம்புலியூரில் நேற்று இரவு கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவிராஜா, தலைமை கழகப் பேச்சாளரும் மாநிலக் கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான கரூர் முரளி, இளம் பேச்சாளர் பரத் , மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் C.K. ராஜா, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் அம்பிகாபதி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பரமசிவம், கிருஷ்ணராயபுரம் பேரூர் கழக செயலாளர் சசிகுமார், பழைய ஜெயங்கொண்டம் பேரூர் கழக செயலாளர் மோகன்ராஜ், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மோகன்குமார் , ஒன்றிய கழக நிர்வாகிகள் , சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கட்சித் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிறப்புரையாற்றிய எம் எல் ஏ சிவகாமசுந்தரி திமுக அரசு நான்காண்டு காலத்தில் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களை எடுத்து கூறினார்.