கரூர் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது .
கரூர் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது .;
கரூர் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது . மேயர் கவிதா கணேசன் தலைமையில் மாநகராட்சி மன்ற சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆணையர் சுதா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள், கரூரில் அண்மையில் திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 84 கடைகளுக்கு வாடகை மிக குறைவாக 12 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தை மதிப்பில் 30 ஆயிரம் வரை உள்ளது. வாடகை நிர்ணயிப்பதில் முறைகேடு நடைபெற்றுள்ளது என குற்றம் சாட்டினர். இதற்கு பதில் அளித்த மேயர் கவிதா கணேசன் புதிய பேருந்து நிலைய கடைகளுக்கு சந்தை மதிப்பு மற்றும் பொதுப் பணித் துறை வழிகாட்டி அடிப்படையிலேயே வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ,எந்தவித முறைகேடும் இல்லை என்று விளக்கம் அளித்தார். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தண்டபாணி பேசுகையில் கரூர் மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த தினசரி ஊதியமான 791 ரூபாய்க்கு பதிலாக ஒப்பந்ததாரரால் 400 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, அரசு நிர்ணயித்த 791 ரூபாயை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு வழங்க நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.