கரூர்- கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத பிரதோஷம் விழா.

கரூர்- கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத பிரதோஷம் விழா.;

Update: 2025-08-07 02:14 GMT
கரூர்- கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத பிரதோஷம் விழா. கரூரில் புகழ்பெற்ற அருள்மிகு அலங்கார வள்ளி, சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று மாலை நந்தி பகவானுக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மூலவர் கல்யாண பசுபதீஸ்வரர் அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டது. தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் நந்தி பகவானுக்கு தூப தீபங்கள் காட்டி, உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். சுவாமிக்கு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஆடி மாத பிரதோஷ விழாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

Similar News