மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழை நீர் தேங்காதவாறு அனைத்து மழைநீரும் வடியும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்ட. மேயர் ஜெகன் பெரியசாமி இதனை தெரிவித்தார்;
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஓவ்வொரு வாரமும் மண்டல அலுவலகத்தில் அப்பகுதிக்குட்பட்ட பொதுமக்களின் கோாிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மண்டல குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது அந்த வகையில் தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது இந்த குறை தீர்க்கும் முகாமில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் தலைமையில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை மேயர் ஜெகன் பொியசாமி பெற்றுக்கொண்டார் இதைத் தொடர்ந்து 3வது வார்டுக்கு உட்பட்ட சுப்பையா நகர் பகுதியில் உள்ள 34 குடியிருப்புக்கு மேயர் ஜெகன் பெரியசாமி ஏற்பாட்டில் வீட்டுக்கான குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மண்டல குறை தீர்க்கும் கூட்டத்தின் போது மேயருக்கு இந்த பகுதி சேர்ந்த பொதுமக்கள் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர் இதைத் தொடர்ந்து பேசிய மேயர் ஜெகன் பொியசாமி தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக மழை நீர் எந்த பகுதியிலும் கடந்த ஆண்டு தேங்க வில்லை அதுபோல் இந்த ஆண்டும் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது குறிப்பாக பக்கீல் ஓடை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுவதுமாக தவிர்க்க பொதுமக்கள் முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் மேலும் மாநகராட்சி பகுதிகளில் இரண்டு இடங்களில் குளங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இதன் மூலம் இந்த பகுதிக்கு வரக்கூடிய பறவைகள் குடிநீர் அருந்துவதற்கு வசதியாகவும் நிலத்தடி நீர் சீராக இருப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார் இந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா மண்டல தலைவர் நிர்மல் ராஜ் மாமன்ற உறுப்பினர்கள் ரங்கசாமி , முருகேசன், சுப்புலட்சுமி ஜெயசீலி ,நாகேஸ்வரி, தெய்வேந்திரன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்