ஏஐசிசிடியு அகில இந்திய தலைவர் சிபிஐ சங்கர் பேட்டி

தமிழக வாக்காளர்களாகும் பீகார் மாநிலத்தினர் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடிக்கும்- ஏஐசிசிடியு அகில இந்திய தலைவர் சிபிஐ சங்கர் பேட்டி;

Update: 2025-08-07 09:02 GMT
தமிழக வாக்காளர்களாகும் பீகார் மாநிலத்தினர் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடிக்கும்- ஏஐசிசிடியு அகில இந்திய தலைவர் சிபிஐ சங்கர் பேட்டி ஏஐசிசிடியு அகில இந்திய தலைவர் மற்றும் சிபிஐ (எம்எல்) தேசிய குழு சார்பில் தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது தேசிய குழு உறுப்பினர் சங்கர் பேசும்போது, பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், வாக்காளர் பட்டியலை முழுமையாகத் திருத்துவதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் 'சிறப்புத் தீவிர திருத்த' நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் 65 லட்சம் பேரை நீக்கம் செய்துள்ளது. பீகாரில் மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள மாநிலங்களிலும் இதுபோன்று வாக்காளர்களை நீக்க உள்ளனர். மேலும் தமிழகத்தில் 2026 தேர்தலை முன்னிட்டு தமிழகத்துடன் சேர்க்க பார்க்கிறார்கள் இது ஆபத்தானது. இது சம்பந்தமாக இந்தியா கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்த உள்ளோம். தமிழகத்தில் ஆணவ படுக்கொலைகள் அதிகமாக நடைபெற்று வருகிறது. உடனடியாக தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதியில் 10 ஆண்டுகளாக பணியில் இருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் என்று கூறினார்கள், ஆனால் 20 வருடங்களாக பணியாளர்கள் பணி செய்து வருகிறார்கள் அவர்களுக்கு வேலை நிரந்தரம் செய்யவில்லை. உடனடியாக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும், கார்ப்பரேட் நிறுவனமே வெளியேறு என்று கூறி 13 ஆம் தேதி விவசாய மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.

Similar News