செங்குணம் வழியாக அருமடல் கிராமத்திற்கு அரசு பேருந்து புதிய வழித்தடத்தை ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை விடுப்பு.
அருமடல் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நலன்கள் கருதி பெரம்பலூரில் இருந்து செங்குணம் வழியாக அருமடல் கிராமத்திற்கு புதிய அரசு பேருந்து வழித்தடம் உருவாக்கி தர பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.;
பெரம்பலூரில் இருந்து செங்குணம் வழியாக அருமடல் கிராமத்திற்கு அரசு பேருந்து புதிய வழித்தடத்தை ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை விடுப்பு. பெரம்பலூர் வட்டம் செங்குணம் வருவாய் கிராமம் & கிராம ஊராட்சிக்கு உட்பட்ட அருமடல் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் ஆயிரகணக்கானோர் வசித்து வருகின்றனர்..அருமடல் கிராமத்தை சேர்ந்த பொது noமக்கள் பலரும் செங்குணம் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கும் , ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கும். . அரசு துணை சுகாதார நிலையத்திற்கும் . மகளிர் சுய உதவிக் குழு கட்டிடத்திற்கும், இ-சேவை மையத்திற்கும். கனரா வங்கிக்கும் என பல்வேறு தேவைகளுக்கு வந்து செல்கின்றனர். செங்குணம் - அருமடல் இடையேயான சாலையில் ரைஸ் மில் ஒட்டியே கிழக்கு பகுதியில் நீர்வழி தடத்திற்கான தரை பாலம் இருந்தது. பெருமழை வெள்ள காலங்களில் இந்த தரை பாலத்தின் வழியாக போக்குவரத்து வாகனங்கள் செல்ல முடியாத சூழல் இருந்தது. தற்போது போக்குவரத்து வாகனங்கள் எளிதில் சென்று வரும்படியாக பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. செங்குணம் அருமடல் இடையேயான சாலையில் தற்போது தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்து உட்பட பல்வேறு போக்குவரத்து வாகனங்கள் சென்று வருகின்றன. செங்குணம் - அருமடல் இடையே அரசு பேருந்து வசதி இல்லாததால் அருமடல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிப்பு முடிக்கும் ஏழை மாணவர்கள் செங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்து படிக்க முடியாமல் வேறு ஓரு பள்ளியில் சேர்ந்து படிக்கும் சூழல் உள்ளது. எனவே அருமடல் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நலன்கள் கருதி பெரம்பலூரில் இருந்து செங்குணம் வழியாக அருமடல் கிராமத்திற்கு புதிய அரசு பேருந்து வழித்தடம் உருவாக்கி தர பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இது தொடர்பாக செங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சிறப்பு முகாமில். பொதுமக்கள் சார்பில் செங்குணம் குமார் அய்யாவு கோரிக்கை மனு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.