கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் அடுத்த ஒளவையார் அம்மன் கோயில் அருகே நேற்று இரவு நண்பருடன் தோவாளை சானலில் புத்தேரி பகுதியை சேர்ந்த சபரிநாதன் (35), மற்றும் அவரது நண்பர் மணி என்பவருடன் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டு இருந்தார். அப் போது ஆற்று நீரில் சபரி நாதன் இழுத்து செல்லப்பட்டார். சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி காவல்துறைக்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து தேடு முயற்சியில் ஈடுபட்டனர். ஆற்றில் அதிகமாக தண்ணீர் வருவதாலும் இரவு நேரம் என்பதாலும் தேடும் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதனை தொடர்ந்து இன்று காலை சுமார் ஆறு மணி அளவில் சேனல் கரையில் நடை பயிற்சிக்கு சென்றவர்கள் தண்ணீருக்குள் ஒருவர் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் அளித்ததின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.