கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ளது. இந்த மருத்துவ கல்லூரி டீனாக லியோ டேவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வராக பணியாற்றி வந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ஆக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது அங்கிருந்து கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக மாற்றப்பட்டுள்ளார். நேற்று பொறுப்பேற்றார்.