காஞ்சிபுரத்தில் ஸ்ரீ அங்காளம்மனுக்கு வளைகாப்பு

சீமந்த வளைகாப்பு கோலத்தில் காட்சியளிய்த ஸ்ரீ அங்காளம்மனுக்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்த பக்தர்கள்;

Update: 2025-08-10 07:48 GMT
கோவில் நகரமான காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய காஞ்சிபுரம் அங்காளம்மன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில் வளாகத்தில் அம்மன் புட்லூர் அங்காளம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் அம்மனுக்கு 51 வகையான பழம் மற்றும் பூஜை பொருட்களை வரிசை தட்டுகளாக வைத்து சீமந்த வளைகாப்பு திருக்கோலத்தில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்ட நிலையில்,திருமண தடை நீங்கிடவும்,குழந்தை பாக்கியம் வேண்டியும் ஏராளமான பக்தர்கள் அம்பாளுக்கு நலங்கு வைத்து வளையலிட்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் சாமி தரிசனம் செய்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானமும்,அம்பாளின் அருட் பிரசாதங்களும் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.

Similar News